சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC), Xi Jinping ஐ ஒருமனதாக அதிபராக தேர்ந்தெடுத்தது. அதிபர் தேர்தலில் வேறு யாரும் போட்டியிடாததால் ஜி ஜின்பிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக “ராய்ட்டர்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தின் புதிய தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த காலத்தில், அவர்கள் இருவரும் பொலிட்பீரோ நிலைக்குழுவில் ஜி ஜின்பிங்கின் அணியில் அங்கம் வகித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதால் கட்சியில் தனது பிடியை அதிகரித்து வருகிறார். இதன் விளைவாக, மாவோ சேதுங்கிற்குப் பிறகு அவர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஆனார்.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். 2018 ஆம் ஆண்டு, ஜி ஜின்பிங் “ஒருவர் நாட்டின் அதிபராக இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும்” என்ற விதியை நீக்கினார். இதன் விளைவாக, அவர் ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை அல்லது நாடு கடத்தப்படும் வரை சீன அதிபராக நீடிக்க வாய்ப்புள்ளது.