குரங்கம்மை வைரஸ் பரவலை சர்வதேச சுகாதார அவசர கால நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் குரங்கம்மை ரைவஸ் வேகமாக பரவி வருகிறது. நடப்பு ஆண்டில் 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 524 பேர் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் கெப்ரியேசஸ், இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது கவலை அளிக்கக்கூடியது என தெரிவித்துள்ளார்.