ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் (MonkeyPox Virus) வேகமாக பரவி வரும் நிலையில், MVA-BN என்ற குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசர கால அனுமதி அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.