அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். டாக்டர்கள் குழு ஜோ பிடனை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையில், அதிபர் ஜோ பிடன் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தார் என்று டாக்டர் கெவின் ஓ’கானர் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஜூலை 26, செவ்வாய்கிழமை கொரோனா வைரஸுக்கு சோதனை செய்த பின்னர், ஜூலை 30 அன்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நேற்று காலை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”
இதன் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh