அமெரிக்காவில் பனிப்புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
வீடுகளைச் சுற்றி மலைபோல் குவிந்து வரும் பனியால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் வேதனையுடன் நாட்களை கழிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. புயல் ஏற்படும் போது வளிமண்டல அழுத்தம் மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்தால், அந்த புயல் ‘வெடிகுண்டு சூறாவளி’ என்று அழைக்கப்படுகிறது. இது கிரேட் லேக்ஸ் பகுதியில் உருவானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அவசர சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகுவதாக கூறப்படுகிறது. அரசு நூலகங்கள், காவல் நிலையங்கள் தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பஃபேலோ பகுதியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர். கனடாவில் 1,40,000 பயன்பாட்டு வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.
ஒன்ராறியோ மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளிலும் இதே போன்ற நிலைமைகள் உள்ளன. கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் 6,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதே நேரத்தில் வியாழக்கிழமை 2,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 60 சதவீத அமெரிக்கர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன், அமெரிக்காவின் பல பகுதிகளில் மைனஸ் 45 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
https://twitter.com/RileyZSmith/status/1607042587788984321?s=20&t=7s1D-CeS_fMCZrvPWEgufA