பிரபல வீடியோ பகிர்வு செயலியான Tik Tok ஆனது பிரிட்டனிலும் ஒரு கடினமான நேரத்தை சந்தித்துள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகள், மடிக்கணினிகள், டேப்லெட்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஸ்மார்ட் போன்களில் டிக் டாக் பயன்படுத்த பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
டிக் டாக் மீதான தடை உடனடியாக அமலுக்கு கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதித்த மூன்றாம் தரப்பு ஆப்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உபகரணங்களில் மிகவும் முக்கியமான தகவல்கள் உள்ளதால், அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் பெல்ஜியமும் ஏற்கனவே அரசு சாதனங்களில் டிக் டாக்கை தடை செய்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில், சட்டப் பேரவைகளில் டிக் டாக்கைப் பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா உத்தரவு பிறப்பித்தது.
தவிர, கனடாவும் இந்த சீன செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலியை கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்களின் தரவுகளை சீன நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே அந்தந்த நாடுகளின் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிகிறது.
Leave a Comment