ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலான் மஸ்க் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ட்விட்டருக்கு புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்துள்ளதாகவும், அவர் 6 வாரங்களில் பொறுப்பேற்பார் என்றும் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும்” என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.