உலகப் புகழ்பெற்ற டைம் இதழ் அமெரிக்காவின் வருங்கால அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்பை ஆண்டின் சிறந்த நபராக தேர்வு செய்துள்ளது. 2024-ம் ஆண்டின் சிறந்த நபராக டிரம்பின் பெயரை அறிவித்துள்ளது.
ட்ரம்ப் இந்த சிறப்புமிக்க அங்கீகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். 2016 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் சிறந்த நபரானார். 78 வயதான டிரம்ப் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அதன்பிறகு, 2020 தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோல்வியடைந்தார்.
எனினும், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து, இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.