போட்டியில் சோகம்.. பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மரணம்..!
இந்தோனேசியா பேட்மிண்டன் போட்டியில் சோகம் ஏற்பட்டது. சீனாவைச் சேர்ந்த ஜாங் ஜிஜியு என்ற 17 வயது வீரருக்கு பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பேட்மிண்டன் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பயிற்சியாளர், சக வீரர்கள் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பது தெரியவந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜாங் ஜிஜியின் மறைவுக்கு இந்திய நட்சத்திரம் பி.வி சிந்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது மரணச் செய்தியால் மனம் உடைந்ததாக சிந்து X இல் பதிவிட்டுள்ளார்.
China badminton player, 17, dies of cardiac arrest after collapsing on court@DiedSuddenly_ pic.twitter.com/KCgYLTxFe7
— Matthew Miller Skow (@SkowMatthew) July 1, 2024
Posted in: உலகம்