ஈராக்கின் ஹம்தானியா மாகாணத்தில் திருமண விழாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு வெடித்ததால் கட்டிடம் தீப்பிடித்து எரிந்திரிக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் முகமது ஷியா அல் சுடானி உத்தரவிட்டுள்ளார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் சைப் அல் பத்ர் தெரிவித்தார்.