அடுத்த 2 நாட்களில் முழு சூரிய கிரகணம்!!

 

இந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா வழியாக வட அமெரிக்காவை கடக்கும்போது இந்த கிரகணம் தெரியும். சில கரீபியன் நாடுகள், மெக்சிகோ, ஸ்பெயின், வெனிசுலா, கொலம்பியா, இங்கிலாந்து, அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பகுதி கிரகணம் தெரியும்.

நாசாவின் மதிப்பீட்டின்படி, முதல் கிரகணம் மெக்சிகோவில் காலை 11:07 மணிக்கு (PDT) தெரியும். இது மைனேயில் தோராயமாக 01:30 (PDT) மணிக்கு முடிவடைகிறது.

 

இந்திய நேரப்படி (IST) இந்தியாவில், 8ஆம் தேதி இரவு 9:12 மணிக்கு தொடங்கி நள்ளிரவுக்குப் பிறகு மதியம் 02:22 மணிக்கு முடிவடையும். ஆனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்தில் நேரடியாக கண்ணுக்கு தெரியாது. நாசாவுடன் இணைந்து டெக்சாஸில் உள்ள மெக்டொனால்டு ஆய்வகம் கிரகணத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

 
 
Exit mobile version