நடப்பு ஆண்டின் முதல் சந்திரகிரகணம் நாளை நடைபெற உள்ள நிலையில், இது குறித்த முக்கிய தகவல்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஆண்டிற்கு இரண்டு முறை சந்திரகிரகணம் மற்றும் 2 முறை சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம். அந்த வகையில், ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி அன்று சூரிய கிரகணம் நடந்து விட்டது. அந்தவகையில் முதல் சந்திரகிரகணம் மே 5ம் தேதியான நாளை உலகம் முழுவதும் நிகழ இருக்கிறது.
இந்திய நேரப்படி இரவு 8:44 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணமானது, இரவு 1:01 மணிக்கு தான் முடிவடையும். இந்த நிகழ்வின் போது சந்திரன் முழுமையாக கருமை நிறத்தில் தெரியும் என்றும், இரவு 10:52 மணிக்கு தான் அதிக அளவில் இருட்டாக இருக்கும் என்றும், இதனை வெறும் கண்களால் காண முடியும் என்றும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.