அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 44 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது.
இங்கு சீன புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில், திடீரென உள்ளே புகுந்த மர்மநபர் துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவில், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். இது அங்கு உள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.