ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பேஸ்புக் கணக்கை புதுப்பிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
டிரம்பின் கணக்கு முன்பு ஃபேஸ்புக் உடன் ட்விட்டரால் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் ட்விட்டரை கைப்பற்றிய எலோன் மஸ்க் டிரம்பின் தடையை நீக்கலாமா? இல்லை வேண்டாமா? என்பது குறித்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மக்கள் வாக்கு மூலம் தடை நீக்கப்பட்டது மற்றும் டிரம்பின் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது.
இதன் மூலம் பேஸ்புக் நிறுவனமும் தடையை நீக்கும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜனவரி 7ஆம் தேதிக்குள் முடிவெடுப்பதாக மெட்டா அறிவித்துள்ளது.
Leave a Comment