தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்ட நிலையில், ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பின் குறைபாடுகளை சரிசெய்ததால் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
விமானிகளுக்கு முக்கியமான தகவல்களும், ஓடுபாதை விவரங்களை அளிக்கும் முக்கியமான மேலாண்மை குறிப்பும் தடைபட்டதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பின்னர் அதிகாரிகள் கடுமையாகப் போராடி அதை மீட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1300 விமானங்கள் தரையிறக்கப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகின. இதனால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் போக்குவரத்து செயலர் பீட் புட்டிகீக் கூறுகையில், மீண்டும் எந்த தவறும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலால் தொழில்நுட்பக் கோளாறுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
