tajikistan earthquake 1

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்..!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

மிண்டனாவ் தீவின் தாவோ டி ஓரோ மாகாணத்தில் 38.6 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். சொத்து மற்றும் உயிர் சேதம் குறித்த விவரம் இன்னும் தகவல் ஏதும் வெளியாகவில்லை.