நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 147 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோட்டாங் மாவட்டத்தில் உள்ள மரிதிம் பிர்டாவில் இன்று காலை 8.13 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
நேபாளத்தில் இதற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் உடமைகள் பலத்த சேதம் ஏற்பட்டது. கடந்த 25 ஏப்ரல் 2015 அன்று, காத்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. சுமார் 8,964 பேர் இறந்தனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh