உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நிலவிய பொருளாதார மந்த நிலை காரணமாக சிறிய நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. தற்போது நிலவும் பணவீக்கத்திற்கு மத்தியில் நிர்வாகத்தின் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நிறுவனங்கள் கருத்து தெரிவித்தது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது ஐடி துறைகளில் பணியாளர்களின் தேவை அதிகரித்தது. அதனால் ஐடி துறைகளில் அதிக பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது நிலைமை சரியாகி இயல்பு நிலை திரும்புவதால் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது.
மற்ற நிறுவனங்களை தொடர்ந்து தற்போது முன்னணி நிறுவனமான அமேசான் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சார்லி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். இந்த அறிவிப்பு அமேசான் நிர்வாக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Comment