ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் விளாடிமிர் புடின் வழங்கி கவுரவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
அங்கு மாஸ்கோவில் க்ரெம்ளின் மாளிகையில் அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்எரிபொருள், வணிகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ரஷ்யாவின் உயரிய விருதான ‛‛ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ” விருதை பிரதமர் மோடிக்கு இன்று வழங்கி விளாடிமிர் புடின் கவுரவித்தார்.