வல்லரசு நாடுகளின் பட்டியலில் சேர இந்தியா தகுதியானது: ரஷ்ய அதிபர் புடின்
மற்ற நாடுகளை விட இந்தியா வேகமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதாகவும், உலகின் வல்லரசு நாடுகளின் வரிசையில் இணைவதற்கு தகுதியான நாடு என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சோச்சியில் வால்டாய் மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவுடனான தனது உறவை ரஷ்யா அனைத்து வழிகளிலும் மேம்படுத்தி வருவதாகக் கூறினார். எங்கள் இருதரப்பு உறவு பரஸ்பர நம்பிக்கையில் தங்கியுள்ளது என்றார்.
சுமார் 150 கோடி மக்கள்தொகை கொண்ட முன்னணி நாடாக இந்தியா உள்ளது. உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் ராணுவ அமைப்பில் ஏராளமான ரஷ்ய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், ஒன்றாக ஆயுதங்களை உருவாக்குகிறோம்’ என்று அவர் கூறினார்.
Posted in: உலகம்