உக்ரைனின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து சிறு குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற கட்டிடத்தை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குவோம் என்று கடுமையாக எச்சரித்தார்.
இதுகுறித்து அவர், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஏவப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று மிரட்டினார். மேலும், “வரும் ஏவுகணைக்காக வானத்தைப் பாருங்கள்” என்று சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை எச்சரித்தார்.