தமிழகத்தில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தொழில் முதலீட்டை ஈர்க்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கேட்டர்பில்லர் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கேட்டர்பில்லர் நிறுவனம் கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.