இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சீன வீரர்களுடன் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் இருக்கும் சீன வீரர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது அனைவரும் தயாராக இருக்கிறோமா என வீரர்களிடம் ஜி ஜின்பிங் கேட்டதாகவும், அதற்கு வீரர் ஒருவர், நாங்கள் அனைவரும் தயார் என்றும், 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1