வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (செப்டம்பர் 8) இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இரவு நேரம் என்பதால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் அங்கு மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 820 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 600க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
A 6.8-magnitude earthquake has hit central Morocco, leaving 820 people dead and at least 672 injured.
Rescuers are currently searching the rubble, with aid efforts underway in hard-hit areas. pic.twitter.com/E0PGs0luoG
— DW News (@dwnews) September 9, 2023
