Thursday, December 7, 2023
Homeஉலகம்பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!
- Advertisment -

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

- Advertisement -

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பனாமா – மற்றும் கொலம்பியா எல்லையில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.

பனாமா நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த நாட்டில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குழுங்கின. இதனால் பெரும் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

forty three − = 37

- Advertisment -

Recent Posts

error: