நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான (UNO) இந்தியாவின் அடுத்த தூதராக பர்வனேனி ஹரிஷ் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
ஹரிஷ் பல நாடுகளில் இராஜதந்திரியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 1990-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஹரிஷ், தற்போது ஜெர்மனிக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றி வருகிறார்.
முன்பு ருச்சிரா கம்போஜ் UNO இந்திய தூதராக பணிபுரிந்தார். அவர் ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஐநாவுக்கான இந்திய தூதர் பதவி காலியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.