பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை மதியம் தொழுகையின் போது ஒரு பயங்கரவாதி தன்னைத்தானே வெடிக்க வைத்துக்கொண்டார். இதனால் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. மசூதியின் சுவர் இடிந்து விழுந்தது. இந்த தாக்குதலில் 83 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 150 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு காரணமாக மசூதியின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி பலர் உயிரிழந்தனர். வெடிவிபத்தை தொடர்ந்து அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.