விளம்பரம்
மருத்துவத்தில் அசாத்திய ஆராய்ச்சிக்காக இரண்டு அமெரிக்க மருத்துவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரவ்கோன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மரபணு செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் அடிப்படைக் கொள்கையான ‘மைக்ரோ ஆர்என்ஏ’வின் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக இருவரும் இந்த விருதைப் பெறுகின்றனர்.
விளம்பரம்
மருத்துவத்துறையில் இதுவரை 227 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். நோபல் பரிசுடன், 100,000 டாலர்களும் ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று நடைபெறும் விழாவில் வழங்கப்படும். நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் முழுவதும் தொடரும். இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் மற்றும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் வரவிருக்கும் நாட்களில் அறிவிக்கப்படும்.
விளம்பரம்