Connect with us

Hi, what are you looking for?

Daily TamilnaduDaily Tamilnadu

உலகம்

மொராக்கோ நிலநடுக்கம்: 2 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!

b2f46bk morocco earthquake 625x300 10 September 23

மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளியன்று இரவு 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

Advertisement. Scroll to continue reading.

அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 புள்ளிகள் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சுற்றுலா நகரமான மராகேஷ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தால் அதிர்வினை உணர்ந்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன.

Advertisement. Scroll to continue reading.

இந்நிலையில் மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடுகளிலும் தாக்கம் இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Advertisement. Scroll to continue reading.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தது. இது குறித்த காட்சிகள் அங்குள்ள வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement. Scroll to continue reading.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 1 =

You May Also Like

ஆரோக்கியம்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து?Advertisement. Scroll to continue...

ஆன்மீகம்

இன்றைய நாள் (செப்டம்பர் 28, 2023) : சோபகிருது-புரட்டாசி 11-வியாழன்-வளர்பிறை  நல்ல நேரம்Advertisement. Scroll to continue reading. காலை: 12.15-1.15 AM மாலை: – PMAdvertisement. Scroll to continue reading....

வேலைவாய்ப்பு

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்Advertisement. Scroll...

இந்தியா

தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நாளை செப்டம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி...

Advertisement
       
error: