லெபனானில் இரண்டு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி – யுனிசெப் அறிக்கை
ஹெஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UNICEF) அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த இரண்டு மாதங்களில் 1,100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் உள்ள குழந்தைகளைப் போலவே லெபனானில் உள்ள குழந்தைகளும் அதே விளைவுகளை எதிர்கொள்கின்றனர். மறுபுறம், காசாவில் குறைந்தது 17,400 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Posted in: உலகம்