மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் பாதிக்கப்பட்ட சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.
மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் உலகம் முழுவதும் விமானம், வங்கி, ஊடகம் உள்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு ‘போர்டிங் பாஸ்’ கையால் எழுதித் தரப்பட்டது. மேலும், விமான சேவைகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், ஏராளமான பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோளாறை சரிசெய்யும் பணியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், இணைய பாதுகாப்பு சேவை அளிக்கும் ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ நிறுவனமும் ஈடுபட்டன. இதன் பலனாக, உலகம் முழுவதும், விமான போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.