ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் ஆட்குறைப்பு தொடர்பான செய்திகள் வெளிவர வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அப்போது சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்தது. எவ்வாறாயினும், நிறுவனத்தில் நிதி இலக்குகளை அடையும் நோக்கத்துடன் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் செயல்முறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
சமீபத்திய ஆட்குறைப்பு குறித்த இறுதி முடிவு அடுத்த வாரத்தில் வெளிவர வாய்ப்புகள் இருப்பதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.