merapi volcano blast

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடிப்பு..!

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெராபி எரிமலை வெடித்து சிதறியது. எரிமலையின் வாயிலிருந்து சாம்பல் மற்றும் சூடான வாயுக்கள் வெளியேறுகின்றன. இதனால் காற்றில் நூறு மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு கரு மேகங்கள் தோன்றின. மறுபுறம், இந்த எரிமலை வெடித்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

download

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்துல் முஹாரி கூறுகையில், “எரிமலையில் இருந்து 7 கிலோ மீட்டர் சுற்றளவில் வாயுக்கள் பரவியுள்ளன. நாள் முழுவதும், எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பல் சூரியனை மறைத்தது. இதனால் பல கிராமங்களை இருள் மூடியது. ஆனால் இதுவரை யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை,” என்றார். இருப்பினும், எரிமலை வெடித்ததால், உள்ளூர் சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

download 1375

இதனையடுத்து, எரிமலையை சுற்றியுள்ள பகுதி மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பக்கம் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. 2010 ஆம் ஆண்டு இந்த எரிமலை வெடித்தபோது தோராயமாக. 347 பேர் இறந்தனர் மற்றும் 20000 கிராம மக்கள் வீடிழந்தனர்.