வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு பெரிய சர்வாதிகாரி என்றால், தானும் சளைத்தவள் இல்லை என்பதை அவரது தங்கையான கிம் யோ-ஜாங்கும் நிரூபித்து வருகிறார். அண்ணனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சமீபத்தில் அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை அவர் கடுமையாக எதிர்த்தார். தாங்கள் சோதனை செய்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினால் அது போர் பிரகடனமாக கருதப்படும் என கிம் யோ ஜாங் தெளிவுபடுத்தியுள்ளார்.
வட கொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் போர் பிரகடனமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
Leave a Comment