16 முறை WWE சாம்பியன் பட்டம் வென்ற ஜான் சினா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள மனி இன் பேங்க் பே-பர்-வியூவில் பங்கேற்ற ஜான் சினா, தொழில்முறை மல்யுத்தத்தில் தனது கடைசி ஆண்டாக 2025 இருக்கும் என்பதை வெளிப்படுத்தினார். அவர் லாஸ் வேகாஸில் உள்ள WWE ரெஸில்மேனியாவில் தனது இறுதிப் போட்டியில் பங்கேற்கிறார். அதற்கு முன் அவர் இந்த ஆண்டின் முதல் RAW எபிசோடில் பங்கேற்பார். ஜான் சினா கிட்டத்தட்ட 23 வருடங்களாக வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.
ஜான் சினா 13 முறை WWE சாம்பியன்ஷிப்பையும் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உலக ஹெவிவெயிட் பட்டத்தையும் வென்றார். அவர் WWE இல் அதிக பட்டங்களை வென்ற வீரராகவும் ஆனார். முதலில் பிரபல ஹாலிவுட் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த ஜான் சினா, தற்போது பிரமாண்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.