ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் லெபனான் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. தினமும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஹிஸ்புல்லா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த அமைப்பின் தலைவர்களான ஹசன் நஸ்ரல்லா மற்றும் யாஹ்யா சின்வார் மற்றும் பல முக்கிய தலைவர்களும் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் நொடிகளில் இடிந்து விழுந்தது. இந்த கொடூர சம்பவத்தில் 100 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களால், சம்பவ இடத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக கட்டிடங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டன. ஒரு தாக்குதலில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு தாக்குதல் நடத்தப்படுகிறது. மறுபுறம், ஹிஸ்புல்லா பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி செய்யும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.