லெபனானில் இருந்து தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. இரண்டு நாட்களாக நடந்த வான்வழித் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
எனினும், ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் நிற்காததால், தரைவழித் தாக்குதலுக்கு தயாராக இருக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது படைகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் லெபனான் எல்லைக்குள் ஊடுருவி ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை கொல்ல இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) தயாராகி வருகிறது. IDF படைகள் எந்த நேரத்திலும் லெபனானுக்குள் நுழையலாம் என்று இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹிஸ்புல்லாவை முடிவுக்குக் கொண்டுவருவதே இதன் நோக்கம் என்பதைத் தெளிவுபடுத்தியது.
கடந்த மூன்று நாட்களில், லெபனானில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா தளங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை தோற்கடிப்பதாக நெதன்யாகு சபதம் செய்தார். இஸ்ரேலிய தாக்குதலில் பெரும் இழப்பை சந்தித்த ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.