cr 20230313tn640ebad809f10

பயணிக்கு உடல்நலக்குறைவு.. பாகிஸ்தானில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்!

டெல்லியில் இருந்து துபாய் (தோஹா) செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

டெல்லியில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தகவலின்படி, விமானத்தின் போது ஒரு நபரின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது, அதன் பிறகு விமானி கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். இதையடுத்து, பயணியை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நைஜீரிய பயணி ஒருவர் நடுவானில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கராச்சி விமான நிலைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களுக்கு விமானி தகவல் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். ஆனால், விமானம் கராச்சியில் தரையிறங்கியபோது அவர் இறந்துவிட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அப்துல்லாவின் சடலத்துடன் இண்டிகோ விமானம் டெல்லி திரும்பியது. பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.