மெக்சிகோவில் வெப்ப காற்று பலூனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மெக்சிகோவின் பிரபலமான சுற்றுலாத் தலமான தியோதிஹுவாகனில் ஹாட் ஏர் பலூன் சவாரிகள் பிரபலமாக உள்ளன. சுற்றுலாப் பயணிகள் சுற்றுவட்டார நகரங்களில் இருந்தும் தொலைதூர இடங்களிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.
நேற்று சனிக்கிழமை சில சுற்றுலாப் பயணிகள் ஹாட் ஏர் பலூன் சவாரிக்கு சென்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக பலூனில் தீப்பிடித்தது. இந்த திடீர் சம்பவத்தால் பலூனில் இருந்தவர்கள் பீதியடைந்தனர்.
தீயை அணைக்க முயன்றும் பலனில்லை. ஒரு பெண்ணும் மற்றொரு நபரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கீழே குதித்தனர். உயரத்தில் இருந்து குதித்த இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயில் எரிந்த பலூன் கீழே விழுந்தது. இதனால் பலூனில் இருந்த மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் முழுவதும் கீழே இருந்தவர்களின் செல்போன்களில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/FNNoticiass/status/1642202304689455104?s=20