நேபாளத்தில் இன்று பயங்கர விபத்து நடந்தது. விமான நிலையத்தில் ஓடுபாதையில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தரையிறங்க முயற்சித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது, விமானத்தில் 68 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாக யாட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
- Advertisement -
நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கி பயணித்த யாட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து, பொக்ரா விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், விபத்துக்கான காரணத்தையோ, விபத்தில் இறந்தவர்களின் விவரத்தையோ அரசு வெளியிடவில்லை. உயிர்ச்சேதம் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
Another Video.. Plane crash in #Nepal…. A #Yeti Air ATR72 aircraft flying to #Pokhara from #Kathmandu has crashed, Aircraft had 68 passengers pic.twitter.com/kYsFdu4VyT
— Jaya Mishra (@anchorjaya) January 15, 2023
#Nepal
72 passengers were on board. Plane crash at Pokhra International Airport. pic.twitter.com/igBoObcCDm
— Aishwarya Paliwal (@AishPaliwal) January 15, 2023