ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இன்று காலை நூற்றுக்கணக்கான விமானங்கள் மூலம் இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களை அடுத்து வெடிகுண்டுகளால் தெஹ்ரான் அதிர்ந்தது.
இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் போரிட்டு வருகிறது. 1980-ம் ஆண்டு ஈராக் உடனான போருக்குப் பிறகு இஸ்ரேல் வெளிப்படையாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.
இந்த மாத தொடக்கத்தில் ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இஸ்ரேல் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மூன்று முறை தாக்கியது. முதல் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்பு மீதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதல்கள் ஈரானின் ஆயுதக் கிடங்குகள் மீதும் நடத்தப்பட்டது. இது பழிவாங்கும் தாக்குதல் என இஸ்ரேல் கூறுகிறது.
🇮🇷 IRANIAN attack on ISRAEL
VS
🇮🇱 ISRAELI attack on IRAN pic.twitter.com/bhgc3ycrx3
— Legitimate Targets (@LegitTargets) October 26, 2024