பாகிஸ்தானில் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. உணவு, பானங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் கூச்சலும், பீதியும் நிலவுகிறது.
பாகிஸ்தானில் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கோதுமை மாவுக்காக மக்கள் அலைகின்றனர். கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. அரசின் மானிய விலையில் கிடைக்கும் கோதுமை மாவுக்காக மக்கள் அதிக அளவில் வரிசையில் நிற்கின்றனர். ஏற்கனவே சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
கோதுமை மாவு மூட்டைகள் சப்ளை செய்யப்படும் இடங்களில் லாரிகள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கோதுமை மாவுக்காக மக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், பைகளை ஏந்திக்கொண்டும் இருக்கிறார்கள். வியாபாரிகள் கடைகளில் நிலைமை கைமீறி வருகிறது. அரசாங்கம் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டது.
Pakistan में ये लड़ाई…ये झगड़ा…ये दंगे जैसे हालात आटे की बोरी के लिए हो रहे हैं…#PakistanEconomy #Pakistan pic.twitter.com/EzoI2LoSc9
- Advertisement -
— Jyot Jeet (@activistjyot) January 9, 2023
கராச்சியில் ஒரு கிலோ மாவு ரூ.160க்கு விற்கப்படுகிறது. இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவர் நகரங்களில் 10 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.1500க்கு விற்கப்படுகிறது.
“आटा नहीं दे सकते तो हमारे ऊपर गाड़ी चढ़ा दो हमें ख़त्म करदो…” आटा नहीं मिलने पर Pakistan के लोग सड़कों पर लेटकर मरने की धमकी दे रहे है…#PakistanEconomy #Pakistan pic.twitter.com/zzWTJAHLCG
— Jyot Jeet (@activistjyot) January 9, 2023
இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானும் இலங்கையைப் போன்ற சூழலை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.