அமெரிக்காவின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இந்த பயங்கர புயலை, ‘இந்த நூற்றாண்டின் பனிப்புயல்’ என அதிகாரிகள் வர்ணித்து வருகின்றனர். புயலால் நியூயார்க்கில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 60 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் கார்கள், பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் லாரிகள் நிறைந்துள்ளன. அனைத்து தெருக்களும் பனியால் மூடப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தனியாக இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல உயர் டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக அமெரிக்கா முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.