இந்திய மக்களின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, புதன்கிழமை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இந்த முக்கியமான நாளில், வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்திற்காக இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதால், இந்திய மக்களின் வளமான வரலாற்றையும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டாடுவோம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான பிணைப்பு இருப்பதாகவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு அமெரிக்காவின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.