ஐடி நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்படுமோ என்ற அச்சம் கடந்த சில நாட்களாகவே ஊழியர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. ஏற்கனவே அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், ஃபேஸ்புக் போன்ற மாபெரும் நிறுவனங்கள் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்த சம்பவங்கள் உள்ளன.
ஆனால் சமீபத்தில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஆட்குறைப்பு தொடர்பாக மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தில் சிலர் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலகளவில் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக கூகுளில் மேலாளர், இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் குறைக்கப்படலாம். அல்லது வேறு சில ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.
உலகில் நடக்கும் போட்டியை செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்கொள்ள, ஓபன் ஏஐ போன்ற போட்டியாளர்களுடன் கடும் போட்டி எதிர்கொள்வதன் காரணமாக பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு (2023), கூகுள் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் (6.4 சதவீதம்) ஊழியர்களை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.