ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் திசை திருப்பப்பட்டது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 2 கைக்குழந்தைகள், 7 பணியாளர்கள் உள்பட 240 பயணிகளுடன் கோவா நோக்கி அசூர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் புறப்பட்டது.
- Advertisement -
இந்த நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே விமானம், உஸ்பெகிஸ்தானுக்கு திசை திருப்பப்பட்டது.