-Advertisement-
ஆப்கனில் பெண்கள் உயர்கல்விக்கு தடை விதித்த தாலிபான் அரசின் செயல் ஒரு பேரிடர் என அந்நாட்டு முன்னாள் பெண்கள் கால்பந்து கேப்டன் நிலோபர் பயாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக பெண்கள் மூச்சு விடக்கூடாது என்றும், சமுதாயத்தில் பெண்கள் நடமாடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என நிலோபர் கிண்டல் அடித்துள்ளார்.
-Advertisement-
கடந்த ஒன்றரை வருடங்களாக பெண் குழந்தைகளின் பள்ளிக்கல்விக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திலும் பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நிலோபர் கவலை தெரிவித்துள்ளார்.
தாலிபான்கள் ஆப்கனில் ஆட்சியை பிடித்த போது அங்கிருந்து தப்பிய நிலோபர் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Advertisement-