அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் நான்காவது குவாட் தலைவர்களின் வருடாந்திர உச்சி மாநாடு வில்மிங்டனில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக வரும் 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
இந்த நிலையில், நேற்று மிச்சிகனில் உள்ள பிளின்ட் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை தான் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். எனினும், அவர்கள் எங்கு சந்திப்பார்கள் என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.