வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின்-சி உடன், இந்த பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. இந்த பழம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு அன்னாசி பழத்தின் விலை என்ன? ரூ.50 அல்லது ரூ.100. பெரியதாக இருந்தால் ரூ.150 வரை இருக்கும். ஆனால், இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் கிடைக்கும் அன்னாசிப்பழத்தின் விலையைக் கேட்டால் அதிர்ந்துபோக தான் வேண்டும்.
அங்கு கிடைத்த ஹெலிகன் அன்னாசிப்பழத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் (ஆயிரம் பவுண்டுகள்). உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அன்னாசிப்பழம் இதுதானாம். ஒவ்வொரு பழமும் ஒரு லட்சத்துக்கு விற்கப்பட்டாலும், உள்ளூர்வாசிகள் போட்டி போட்டு வாங்குகின்றனர். இது வளர சுமார் மூன்று ஆண்டுகள் ஆகுமாம். அதிகளவிலான ஆட்கள் தேவைப்படுவதாலும், காலநிலை நிலைமைகளாலும் இப்பழத்தை அறுவடை செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.