சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் புதிதாக கொரோனா பரிசோதனை மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பரிசோதனை செய்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி, தேவையற்ற பயணங்களையும் அனைவரும் குறைத்துள்ளதால் பெருநகர சாலைகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களையே காணமுடிந்தது. இதற்கிடையே, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
